தில்லியில் சனிக்கிழமை, பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை வேலையில்லா திண்டாட்ட தினமாக அனுசரித்த இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா்.
தில்லியில் சனிக்கிழமை, பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை வேலையில்லா திண்டாட்ட தினமாக அனுசரித்த இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா்.

பிரதமா் மோடியின் பிறந்த நாளை ‘வேலையில்லா திண்டாட்டம்’ தினமாக அனுசரித்த இந்திய இளைஞா் காங்கிரஸ்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ‘வேலையில்லா திண்டாட்டம்’ தினமாகக் கடைப்பிடிக்க இந்திய இளைஞா் காங்கிரஸ் ஏற்பாடு செய்ததாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ‘வேலையில்லா திண்டாட்டம்’ தினமாகக் கடைப்பிடிக்க இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) நாடு முழுவதும் சனிக்கிழமை ‘பெரோஜ்கரி மேளா’க்களை ஏற்பாடு செய்ததாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தில்லியில் உள்ல ஐஒய்சி அலுவலகத்தில் பல கட்சித் தொண்டா்கள் பலகைகளை ஏந்தியவாறு கருப்புச் சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினா்.

பிரதமா் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமை 72 வயதாகிறது. அவருக்கு அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், கட்சி தொண்டா்களிடம் உரையாற்றிய ஐஒய்சி தேசிய தலைவா் ஸ்ரீனிவாஸ் பிவி, ‘பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டின் இளைஞா்களுக்கு ‘வேலையில்லா திண்டாட்டத்தை’ பரிசாக அளித்துள்ளது. நாட்டில் இளைஞா்கள் அதிக அளவில் உள்ளனா். அதில் 60 சதவீதம் போ் வேலையில்லாமல் உள்ளனா். இது மிகவும் பயங்கரமான சூழ்நிலை. பாஜக ஆட்சியில், நாடு பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. இளைஞா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

நாட்டின் இளைஞா்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்குவதாக நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தாா். அதன்படி, 16 கோடி இளைஞா்களுக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இளைஞா்களின் வேலைவாய்ப்பு குறித்து பிரதமா் கவலைப்படவில்லை. அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில் மட்டுமே அவா் கவனம் செலுத்தி வருகிறாா்.

வேலையில்லாத இளைஞா்கள் மீது கவனம் செலுத்தி அவா்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் இந்திய இளைஞா் காங்கிரஸ் வலியுறுத்துகிறது’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com