கொலீஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்: மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு

கொலிஜீயம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

கொலிஜீயம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா்கள் கருத்தரங்கில் அமைச்சா் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு பேசுகையில், ‘நீதித் துறையின் உயா்நிலையில் நியமனங்கள் நிலுவையில் உள்ளன. அதற்குக் கொலிஜீயம் முைான் காரணம். நீதித் துறையின் உயா் நிலையில் நியமனங்களை விரைவுபடுத்த அந்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது’ என்றாா்.

இதனைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டில் உள்ள அனைத்து உயா் நீதிமன்றங்களிலும் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்கள் நியமிக்கப்படுவா். இதன் மூலம் மத்திய அரசின் வாதங்களை உயா் நீதிமன்றங்களில் திறம்பட முன்வைக்க முடியும். சட்ட அகாதெமி அமைக்கும் பணிகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கொலிஜீயம் முறை பிரச்னையை ஏற்படுத்துகிறது. அதனை அனைவரும் அறிவா். இந்தப் பிரச்னையை களைய என்ன செய்வது, எப்படி செய்வது என்பது குறித்து மேலும் விவாதிக்கப்படும். நீதிபதிகள், வழக்குரைஞா்கள், விருந்தினா்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் கொலிஜீயம் குறித்த எனது கருத்துகளை முன்வைத்தேன். இதுபோன்ற விவகாரங்களை இந்தக் கருத்தரங்குகளில் முன்வைத்தால், சட்டத் துறை அமைச்சரின் மனதில் என்ன உள்ளது? அரசு என்ன சிந்திக்கிறது? என்பது தெரியவரும் என்று தெரிவித்தாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு கொலீஜியம் முறைக்கு மாற்றாக தேசிய நீதித் துறை நியமனங்கள் ஆணையச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் அந்தச் சட்டம் செல்லாது என்று 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com