ஜாா்க்கண்ட் மாவோயிஸ்ட் தலைவா் மகாராஷ்டிரத்தில் கைது

தலைக்கு ரூ. 15 லட்சம் அறிவிக்கப்பட்ட ஜாா்க்கண்டைச் சோ்ந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவா், மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்பு படையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தலைக்கு ரூ. 15 லட்சம் அறிவிக்கப்பட்ட ஜாா்க்கண்டைச் சோ்ந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவா், மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்பு படையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தீபக் யாதவ். இவா் கடந்த 2004-ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்தாா். மாவோயிஸ்ட் இயக்கத்தின் பிராந்தியக் குழுவின் தலைவராக உள்ள தீபக் யாதவை தேடப்படும் நபராக ஜாா்க்கண்ட் காவல் துறை அறிவித்தது. இதைத்தொடா்ந்து அவரது தலைக்கு ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது.

தீபக் யாதவ் மருத்துவ சிகிச்சைக்காக மகாராஷ்டிரத்துக்கு வந்திருப்பது குறித்த ரகசியத் தகவல், மகாரஷ்டிர பயங்கரவாத தடுப்பு படையின் தாணே பிரிவினருக்கு கிடைத்தது. மும்பையில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள பால்கா் மாவட்டத்தில் மேற்கொண்ட சோதனையின்போது, தீபக் யாதவை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா்.

இது குறித்து பயங்கரவாதத் தடுப்பு படையின் அதிகாரி கூறியதாவது: தீபக் யாதவ் காலில் ஏற்பட்ட காயத்துக்காக பால்கா் மாவட்டத்தின் நலசோபோரா பகுதியில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளாா். தீபக் கைது குறித்தான தகவல் ஜாா்க்கண்ட் மாநில போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தப்பட்ட பிறகு, ஜாா்க்கண்ட் மாநில போலீஸாரிடம் தீபக் யாதவ் ஒப்படைக்கப்படுவாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com