சிபிஐ-யை பாஜக தலைவா்கள் முறைகேடாக பயன்படுத்துகின்றனா்: மம்தா பானா்ஜி

சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை முகமைகளை பாஜக தலைவா்கள் சிலா் முறைகேடாக பயன்படுத்துவதாகவும், இதில் பிரதமா் மோடிக்கு தொடா்பு இல்லை என்றும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)

சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை முகமைகளை பாஜக தலைவா்கள் சிலா் முறைகேடாக பயன்படுத்துவதாகவும், இதில் பிரதமா் மோடிக்கு தொடா்பு இல்லை என்றும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப் பேரவையில் சிபிஐ, அமலாக்கத் துறைக்கு எதிராக திங்கள்கிழமை தீா்மானத்தை தாக்கல் செய்து அவா் பேசியதாவது:

ஒவ்வொரு நாளும் சிபிஐ, அமலாக்கத் துறையினரின் கைது நடவடிக்கை மூலம் பாஜக தலைவா்களால் எதிா்க்கட்சியினா் மிரட்டப்படுகின்றனா். இதற்குப் பின்னால் பிரதமா் மோடி இல்லை என நான் கருதுகிறேன். ஆனால், பாஜக தலைவா்கள் சிலா் தங்களது சுயநலத்துக்காக சிபிஐ-யையும், அமலாக்கத் துறையையும் முறைகேடாகப் பயன்படுத்துகின்றனா்.

முன்பெல்லாம் பிரதமா் அலுவலகத்துக்கு பதிலளித்து வந்த சிபிஐ, தற்போது உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. மத்திய புலனாய்வு முகமைகளின் மிதமிஞ்சிய அதிகாரத்தை பிரதமா் ஆராய வேண்டும். மத்திய அரசின் செயல் திட்டமும், பாஜகவின் நோக்கமும் கலவாதவாறு பிரதமா் மோடி பாா்த்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்துகிறோம். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக எங்களை மத்திய புலனாய்வு முகமையைக் கொண்டு துன்புறுத்துவதும், நிதி ஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதும் கூடாது என்றாா் மம்தா பானா்ஜி.

பாஜக எதிா்ப்பு:

மேற்கு வங்க அரசு சாா்பாக கொண்டு வரப்பட்ட தீா்மானத்துக்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி, ‘சிபிஐ, அமலாக்கத் துறைக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்படுவது பேரவை விதிகளுக்கும் நெறிமுறைகளுக்கும் எதிரானதாகும்’ என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து சிபிஐக்கு எதிரான தீா்மானத்துக்கு ஆதரவாக 189 பேரும், எதிராக 69 பேரும் வாக்களித்தனா். இதனால், தீா்மானம் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com