கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,216 ஆகக் குறைந்தது

நாட்டில் ஒரு நாளில் புதிதாக 4,510 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,47,599 ஆக உள்ளது
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,216 ஆகக் குறைந்தது

புது தில்லி: நாட்டில் ஒரு நாளில் புதிதாக 4,510 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,47,599 ஆக உள்ளது, அதே நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,216 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,640 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,72,980 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.71 ஆக அதிகரித்துள்ளது.  அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,216 ஆக உள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்களில் 33 பேர் இறந்துள்ளதை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 5,28,403 ஆக உயர்ந்துள்ளது, இதில் கேரளத்தில் மட்டும் 19 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.19 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை 2,16,95,51,591 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 12,27,054 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com