'செங்கல்லைக் கூட காணவில்லை': நட்டாவின் எய்ம்ஸ் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. பதில்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்ததற்கு, வைத்திருந்த செங்கல்லைக் கூட காணவில்லை என பதிலளித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.
நட்டாவின் எய்ம்ஸ் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. பதில்
நட்டாவின் எய்ம்ஸ் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. பதில்


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்ததற்கு, வைத்திருந்த செங்கல்லைக் கூட காணவில்லை என பதிலளித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.

மதுரை மாவட்டத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜே.பி. நட்டாவின் கூற்றைத் தொடர்ந்துதான் மதுரையில் எய்ம்ஸ் அமையவிருக்கும் இடத்தை நேரில் சென்று பார்த்ததாகவும், ஆனால், அங்கு மருத்துவமனைக் கட்டடம் ஒன்றும் தென்படவில்லை என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் வந்திருக்கும் ஜே.பி. நட்டா, தமிழகத்தின் பொருளாதார மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. கூடுதலாக, தொற்று நோய் பிரிவுக்கு ரூ.164 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடன், 250 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளுடன் அமையவிருக்கிறது என்றார்.

ஆனால் இதற்கு பதிலளித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. தாகூர், டிவிட்டரில் தொடர்ச்சியான பதவுகள் மூலம் பதிலளித்துள்ளார்.

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கூறியதாவது, மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிந்துவிட்டது என்று ஒரு பொய்யான  பரப்புரையை பாஜக அகில இந்திய தலைவர் நட்டா கூறியது பெரிய அதிர்ச்சியாக உள்ளது. ஒரே வாரத்தில் எப்படி கட்டி முடித்துள்ளனர் என பார்த்துவிடாலாம் என இங்கு வந்தோம். இந்த இடத்தில்   இருந்த போர்டை கூட காணோம், அங்கு ஒரு செங்கல்.. ஒரே ஒரு கல் இருந்தது. அதுவும் தற்போது இல்லை என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 1200 கோடி ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு இந்த திட்டம் ரூ.1,900 கோடிக்கு செயல்படுத்த உயர்த்தப்பட்டது. இதற்காக ஜப்பானின் ஜெய்கா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட ரூ.700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. எனவே அமைச்சரவையைக் கூட்டி உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழக அரசு போதுமான நிலத்தை ஒப்படைத்தும் விட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட தொகைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை. இதுதான் உண்மையான நிலை. இதைப் பற்றி மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக முழு பொய்யை நட்டா தெரிவித்துள்ளார். 

பொய் சொல்வதை முழு நேர வேலையாக வைத்துள்ளனர் பாஜகவினர் என்றார்.

தொடர்ந்து பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், 'முன்னாள் சுகாதா அமைச்சர் ஜே.பி. நட்டா முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் வேலையாய் எய்ம்ஸ் 95 % சத வேலை முடிந்துள்ளது. பிரதமர் அதை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று கூறினார். ஆனால் இங்கே வந்துப் பார்த்தால் வடிவேல் சினிமா போல கிணறை காணவில்லை என்பது போல் நட்டா கட்டிய 95% வேலை முடிந்த எய்ம்ஸ்  கட்டடத்தை காணவில்லை. அதை தேடிக் கண்டுபிடிக்க வந்தோம். இதன் மூலம் மத்திய அரசு தமிழகத்ததை ஏமாற்றுகிறது, வஞ்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இதே நிலைதான்  மதுரை விமான நிலையத்திற்கும் உள்ளது. ஒரு பைசா கூட ஒதுக்காமல், ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

தமிழக மக்களை தொடர்ந்து பாஜக ஏமாற்றி வருகிறது. எய்ம்ஸ் பொறுத்தவரையில் பாஜக பொய்யான தகவல் பரப்புகிறது.

நாட்டில் உள்ள 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பானிடம் புரிந்துணர்வு செய்து ஜெயிக்கா நிறுவனத்திடம் நிதி பெற்று மருத்துவமனை கட்டுகிறது மத்திய அரசு.  மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அரசின் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது. 89 சதவீத நிதி ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் தான் ஒதுக்கீடு செய்கிறது. அதற்கான ஒப்புதல் வழங்கியும் மத்திய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் பெறவில்லை. அதன் பிறகு, பணிகள் துவங்குவதற்கான டெண்டர் விடப்பட வேண்டும். இதற்கான பணிகளை இதுவரை மத்திய அரசு செய்யவில்லை. தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏமாந்தவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

அதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றதற்கு ஜே.பி. நட்டாவுக்கு நன்றி. நானும் மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும், மதுரைக்குச் சென்று எய்ம்ஸ் அமையவிருக்கும் தோப்பூர் பகுதியில் தேடிப்பார்த்தோம். ஆனால் அங்கு எதுவுமே தென்படவில்லை. எய்ம்ஸ் கட்டடத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவு பெறவிருப்பதாகக் கூறினார். முன்னாள் அமைச்சர் நட்டா, இவ்வாறு பணி நிறைவு பெற்றுவிட்டதாக பொய் கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இப்படித்தான் தமிழக மக்களை அவர்கள் ஏமாற்றப்பார்க்கிறார்கள் என்றும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com