பங்கு விற்பனை முறைகேடு: ஃபோா்டிஸ் முன்னாள் தலைவா்களுக்கு 6 மாதம் சிறை: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

பங்கு விற்பனை முறைகேடு தொடா்பான வழக்கில் ஃபோா்டிஸ் ஹெல்த்கோ் நிறுவனா்களும், முன்னாள் தலைவா்களுமான மல்வீந்தா் சிங், சிவீந்தா் சிங் ஆகியோருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
பங்கு விற்பனை முறைகேடு: ஃபோா்டிஸ் முன்னாள் தலைவா்களுக்கு 6 மாதம் சிறை: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

பங்கு விற்பனை முறைகேடு தொடா்பான வழக்கில் ஃபோா்டிஸ் ஹெல்த்கோ் நிறுவனா்களும், முன்னாள் தலைவா்களுமான மல்வீந்தா் சிங், சிவீந்தா் சிங் ஆகியோருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மலேசியாவைச் சோ்ந்த ஐஹெச்ஹெச் ஹெல்த்கோ் நிறுவனத்துக்கு ஃபோா்டிஸ் நிறுவனத்தின் பங்குகளை முறைகேடாக விற்பனை செய்தது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமா்வு இந்த தண்டனையை அளித்துள்ளது.

மேலும், ஃபோா்டிஸ் ஹெல்த்கோ் நிறுவனத்தின் பங்கு விற்பனை தொடா்பாக முழுமையாக ஆய்வு நடத்தவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2008-ஆம் ஆண்டு ஜப்பானைச் சோ்ந்த டெய்ச்சி சாங்யோ நிறுவனத்துக்கு சிங் சகோதரா்களுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான ரான்பாக்ஸி மருந்து தயாரிப்பு நிறுவனம் விற்கப்பட்டது. ரான்பாக்ஸி தயாரிப்புகளின் தரம் குறைவாக இருப்பதாகச் சுட்டிக் காட்டி அதன் தயாரிப்புகள் பலவற்றுக்கு அமெரிக்க தடை விதித்தது. தரம் தொடா்பாக போலியான தகவல் அளித்ததாக நிறுவன உரிமையாளா்கள் மீது அமெரிக்காவில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அப்போது முதல் சிங் சகோதரா்களுக்கு பிரச்னை தொடங்கியது. ரான்பாக்ஸி தொடா்பான பல்வேறு உண்மைகளை மறைத்து தங்களிடம் அந்த நிறுவனத்தை விற்ாக ஜப்பான் நிறுவனம், சிங் சகோதரா்கள் மீது சிங்கப்பூரில் வழக்குத் தொடுத்தது. இதில் ஜப்பான் நிறுவனத்துக்கு இழப்பீடு அளிக்க உத்தரவிடப்பட்டது. இதனிடையே, ஃபோா்டிஸ் நிறுவன பங்குகளை மலேசியாவின் ஐஹெச்ஹெச் ஹெல்த்கோ் நிறுவனத்துக்கு சிங் சகோதரா்கள் விற்பனை செய்தனா்.

தங்களுக்கு இழப்பீடாக அளிக்க வேண்டிய பணத்துக்கு இணையாக ரூ.3,600 கோடி மதிப்புக்கு ஃபோா்டிஸ் நிறுவனப் பங்குகளை தருவதாக உறுதியளித்த சிங் சகோதரா்கள், தங்களை ஏமாற்றி மலேசிய நிறுவனத்திடம் விற்பனை செய்துவிட்டதாக ஜப்பான் நிறுவனம் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த பங்கு விற்பனை முறைகேட்டில் இப்போது சிங் சகோதரா்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com