சண்டீகர் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயர்: பிரதமர் மோடி

சண்டீகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை இன்று (செப்.25) தெரிவித்துள்ளார்
நரேந்திர மோடி  (கோப்புப் படம்)
நரேந்திர மோடி (கோப்புப் படம்)

சண்டீகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை இன்று (செப்.25) தெரிவித்துள்ளார். 

மாதத்தின் கடைசி வாரமான இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது, புதிய இந்தியாவை நோக்கி நாம் முன்னேறும்போது சுதந்திர போராட்ட வீரர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

செப்டம்பர் 28ஆம் தேதி பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகர் விமானநிலையம் ஷாஹீட் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய உள்ளது.

கைப்பேசி தயாரிப்பதில் 2வது மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது. 

பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். அதற்கு பதிலாக சணல், பருத்தி, வாழை நார் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். 

நகரைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் பெங்களூரு, மீரட் நகரங்கள் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. 

கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கால நிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மற்றொரு புறம் நமது கடற்கரைகளும் பாதிக்கப்படுகின்றன.  

உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்திற்கு யோகா சிறந்த முறை என்பதை உலகம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சிறுமி அன்வியை நினைவுகூர்கிறேன். யோகா அவரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com