மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 5-6 பணக்கார இந்தியர்களுக்கான அரசு என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குறறம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான அரசு அல்ல. இது 5-6 பணக்கார இந்தியர்களுக்கான அரசு, அவர்கள் விரும்பும் எந்த வணிகத்தையும் ஏகபோகமாக நடத்துகிறார்கள்.
இதையும் படிக்க | காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை இந்தியாவுக்கு நாங்கள் (காங்கிரஸ்) கொடுத்ததில்லை.
இந்தியா இன்று எதிர்கொள்ளும் விலை உயர்வை நாங்கள் ஒருபோதும் வழங்கவில்லை. மோடி அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளது என ராகுல்காந்தி கூறியுள்ளார்.