முதல்வர் பதவி குறித்து அஜித் பவாரின் கருத்துக்கு ஃபட்னாவிஸ் பதில்

எல்லோரும் முதல்வராக முடியாது என்று முதல்வர் பதவி குறித்த அஜித் பவாரின் கருத்துக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிலளித்துள்ளார்.
முதல்வர் பதவி குறித்து அஜித் பவாரின் கருத்துக்கு ஃபட்னாவிஸ் பதில்

எல்லோரும் முதல்வராக முடியாது என்று முதல்வர் பதவி குறித்த அஜித் பவாரின் கருத்துக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிலளித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி என்னும் எதிா்க்கட்சிகளின் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிர எதிா்க்கட்சித் தலைவருமான அஜித் பவாா், விரைவில் கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைப்பாா் என்று கூறப்பட்டது. மும்பையில் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்துக்கு அவா் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அஜித் பவார் மறுத்துள்ளார்.

கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் தேசியவாத காங்கிரஸுடன் இருக்கிறோம்.  எனது வாழ்நாள் முழுவதும் கட்சிக்காகப் பணியாற்றுவேன் என்று விளக்கமளித்திருந்தார். இதனிடையே வெள்ளிக்கிழமை ஊடக குழுவிற்கு அஜித் பவார் அளித்த பேட்டியில், மகாராஷ்டிரத்தின் முதல்வராக 100 சதவீதம் விரும்புவேன் என்று தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல்வர் பதவிக்கு என்சிபி உரிமை கோருமா என்ற கேள்விக்கு, ஏன் 2024, இப்போதும் முதல்வர் பதவிக்கு உரிமை கோரத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் முதல்வர் பதவி குறித்த அஜித் பவாரின் கருத்துக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிலளித்துள்ளார். அதில், அஜித் பவாரின் பேட்டியை நான் பார்க்கவில்லை. யாரும் முதல்வராக ஆசைப்படுவதில் தவறில்லை, பலர் அதை விரும்புகிறார்கள் ஆனால் எல்லோராலும் முடியாது. அவருக்கு நல்வாழ்த்துக்கள். இவ்வறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com