நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தீவிரமான விஷயம்: மம்தா பானர்ஜி

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்பு மீறல் தீவிரமான விஷயம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தீவிரமான விஷயம்: மம்தா பானர்ஜி

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்பு மீறல் ஒரு தீவிரமான விஷயம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் நினைவு நாளில், பூஜ்ய நேரத்தின் போது, பொது கேலரியிலிருந்து மக்களவை அறைக்குள் குதித்த இருவர், டப்பாக்களில் இருந்து மஞ்சள் நிற புகையை வெளியேற்றி கோஷங்களை எழுப்பினர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் ஒரு தீவிரமான விஷயம் என்றும், அது ஒரு மிக பெரிய தவறு. இதை மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார். அவர்கள் அதை விசாரிக்கட்டும் என்று தில்லி புறப்படுவதற்கு முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பான போராட்டங்கள் காரணமாக கட்சியின் மாநிலங்களவை எம்.பி டெரிக் ஓ பிரையன் மற்றும் மக்களவையைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் மீதமுள்ள அமர்வில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com