பிரான்ஸில் தடுக்கப்பட்ட விமானம் இந்தியா வந்தடைந்தது!

பிரான்ஸின் வட்ரே விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட விமான இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தது.
ரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட விமானம்.
ரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட விமானம்.

பிரான்ஸின் வாட்ரி நகர விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட விமான இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிகரகுவா நாட்டுக்கு 303 பயணிகளுடன் வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்ட விமானம், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில், எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டது.

அந்த விமானத்தில் பெரும்பாலும் இந்தியா்கள் பயணித்த நிலையில், விமானத்தில் ஆள்கடத்தல் நடைபெறுவதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அந்த விமானம் நிகரகுவா புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்தனா்.

மேலும் அந்த விமான நிலையத்துக்கு அந்நாட்டு காவல் துறை சீல் வைத்தது. பயணிகள் அனைவரும் விமான நிலைய கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், காவல் துறை விசாரணையில் விமான பயணிகள் உரிய அனுமதி பெற்றதும், மனித கடத்தல் இல்லை என்றும் தெரியவந்தது. 4 நாள்கள் விசாரணைக்குப் பின் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com