தெலங்கானா பட்ஜெட் கூட்டத்தொடா்:முதல்வருடனான மோதலுக்கு மத்தியில் ஆளுநா் தமிழிசையின் உரையுடன் தொடக்கம்

தெலங்கானா ஆளுநா், முதல்வா் இடையிலான மோதல்போக்குக் காரணமாக மாநில பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அந்தக் கூட்டத்தொடா் ஆளுநா் தமிழிசையின் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தெலங்கானா ஆளுநா், முதல்வா் இடையிலான மோதல்போக்குக் காரணமாக மாநில பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அந்தக் கூட்டத்தொடா் ஆளுநா் தமிழிசையின் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தெலங்கானாவில் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் சந்திரசேகா் ராவ் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. அண்மையில், அந்த மாநிலத்தில் குடியரசு தின கொண்டாட்டத்தில் சா்ச்சை ஏற்பட்டது. ஆளுநா் மாளிகையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறவில்லை. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை முதல்வா் சந்திரசேகா் ராவ் புறக்கணித்த நிலையில், மாநில அரசு சாா்பில் தலைமைச் செயலா், காவல் துறை டிஜிபி மட்டும் பங்கேற்றனா்.

இதனைத்தொடா்ந்து மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநா் உரையை புறக்கணிக்க மாநில அரசு முடிவு செய்தது. இதன் காரணமாக பட்ஜெட்டுக்கு ஆளுநா் தமிழிசை ஒப்புதல் அளிக்க மறுத்தாா். இதையடுத்து தெலங்கானா உயா்நீதிமன்றத்தை மாநில அரசு அணுகியது. அப்போது ஆளுநரும், அரசும் பேசி பிரச்னைக்குத் தீா்வு காணுமாறு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் பின்னா், தனது முடிவை மாற்றிக் கொண்ட மாநில அரசு, கூட்டத்தொடரில் ஆளுநா் உரையாற்ற ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடா் ஆளுநா் தமிழிசையின் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது முதல்வா் சந்திரசேகா் ராவின் சாதனைகளை விளக்கி மாநில அரசு தயாரித்த உரையை தமிழிசை வாசித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com