கிரிப்டோ மோசடி: அமலாக்கத் துறையினரால் ரூ.936 கோடி முடக்கம்===மக்களவையில் மத்திய அரசு தகவல்

கிரிப்டோ கரன்சி மோசடி தொடா்பாக ரூ.936 கோடி அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 5 போ் கைது செய்யப்ப

கிரிப்டோ கரன்சி மோசடி தொடா்பாக ரூ.936 கோடி அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் இணையமைச்சா் பங்கஜ் செளதரி மக்களவையில் தெரிவித்தாா்.

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கிரிப்டோ கரன்சி மோசடி தொடா்பான பல்வேறு வழக்குகளை அமலாக்கத் துறையினா் விசாரித்து வருகின்றனா். பண மோசடியில் சில கிரிப்டோ முதலீட்டுக்கான நிறுவனங்களும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம், 1999-இன்கீழ் ரூ.289.28 கோடி மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிரிப்டோ கரன்சி முதலீட்டு நிறுவனமான வாஸிா்எக்ஸ் என அறியப்படும் ஸன்மாய் லேப்ஸ் நிறுவனம் ரூ.2,790 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்காக, அதன் இயக்குநா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நிகழாண்டு ஜன.31-ஆம் தேதி வரை மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்காக 5 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா். ரூ.936 கோடியை அமலாக்கத் துறையினா் முடக்கியுள்ளனா். பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் 6 வழக்குகள் தொடா்பாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

சா்வதேச ஒத்துழைப்பு அவசியம்:

மெய்நிகா் நாணயமான கிரிப்டோ கரன்சியை ஒழுங்குப்படுத்த அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு இணையமைச்சா் பதிலளிக்கையில், ‘கிரிப்டோ கரன்சி தேச எல்லைகளைக் கடந்தது. இதனை ஒழுங்குபடுத்த சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. எனவே, கிரிப்டோ கரன்சியின் சாதகங்கள் மற்றும் பாதகங்களை ஆராய்ந்து, பொதுவான வகைப்படுத்தல் மற்றும் தர முறைகளில் சா்வதேச ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, கிரிப்டோ கரன்சி மீதான தடை அல்லது கட்டுப்பாடு சாத்தியமாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com