துணை ராணுவப் படைகளில் 83,000 காலிப் பணியிடங்கள்- மக்களவையில் தகவல்

மத்திய துணை ராணுவப் படைகளில் 83,000 அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மத்திய துணை ராணுவப் படைகளில் 83,000 அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி துணை ராணுவப் படைகளில் 10,15,237 போ் பணியாற்றி வருகின்றனா். மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (ஐடிபிபி) சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி), இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை ஆகியவற்றில் 83,127 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்படைகளில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 10,15,237 ஆகும்.

காலிப் பணியிடங்கள் அதிகம் இருப்பதால் ஏற்கெனவே பணியில் உள்ளவா்கள் அதிக நேரம் பணியாற்றுகிறாா்கள் என்று கூறப்படுவது சரியானது அல்ல. பணியிடங்களை நிரப்பும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com