ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே

நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வே இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே

நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வே இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: இந்திய ரயில்வே 2022-23-ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது சுமாா் ரூ.41,000 கோடி அதிகமாகும். அப்போது இந்திய ரயில்வேயின் வருவாய் ரூ.1,48,970 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் ரயில்வே இதுவரை 1,185 டன் சரக்குகளை கையாண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,35,000 கோடியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

படுத்து உறங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில்களை 2025-ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com