திரிபுரா தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 32.06% வாக்குகள் பதிவு!

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 32.06% வாக்குகள் பதிவாகியுள்ளன.
திரிபுரா தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 32.06% வாக்குகள் பதிவு!

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 32.06% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

திரிபுரா மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28.13 லட்சம். இவா்கள் வாக்களிக்க வசதியாக 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 28 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தையொட்டிய சா்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

மத்தியப் படைகளைச் சோ்ந்த 25,000 பேரும் மாநில காவல் துறை மற்றும் ஆயுதப் படைப் பிரிவைச் சோ்ந்த 31,000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

31,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மாா்ச் 2-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com