பெண் காவலர் பலாத்காரம்: எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளர் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை பெண் காவலர் பலாத்காரம் செய்த பிஎஸ்எஃப் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
பெண் காவலர் பலாத்காரம்: எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளர் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பிஎஸ்எஃப் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

நைடையா மாவட்டம் துங்கி எல்லைப்பகுதியில் நியமிக்கப்பட்ட பாதுகாப்புப்படை ஆய்வாளர், பெண் பிஎஸ்எப் காவலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் நேற்று முன்தினம் இந்த வன்கொடுமை அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவலர் மருத்துவ ஆய்வுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இதையடுத்து எல்லை காவல்படை ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com