அசாமின் 31வது ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா பதவியேற்பு!

அசாமின் 31வது ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா இன்று பதவியேற்றுக் கொண்டார். 
அசாமின் 31வது ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா பதவியேற்பு!

அசாமின் 31வது ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா இன்று பதவியேற்றுக் கொண்டார். 

அசாமின் ஸ்ரீமந்தா சங்கர்தேவா கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற விழாவில் கடாரியாவுக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 

முன்னதாக அசாம் ஆளுநராக இருந்த ஜெகதீஷ் முகியின் பதவிக்காலம் முடிந்த நிலையில், தனது பதவியை ஞாயிறன்று பதவியை ராஜிநாமா செய்த நிலையில், 
மூத்த பாஜக தலைவராக இருந்த கட்டாரியா பதவியேற்றார். 

பதவியேற்பு விழாவில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அமைச்சரவை அமைச்சகர்கள், மாநில அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கட்டாரியா தனது மனைவி அனிதாவுடன் செவ்வாய்க்கிழமை ஆளுநர் மாளிகைக்கு வந்த நிலையில், அவர்களுக்கு மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

78 வயதான கட்டாரியா, ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே அரசில் உள்துறை அமைச்சராக இருந்தார். அசாம் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com