கடன் மறுசீரமைப்பு:உலக வங்கி, ஐஎம்எஃப் தலைவா்களுடன் நிா்மலா சீதாராமன் விவாதம்

சில நாடுகளின் கடன்களை மறுசீரமைப்பது குறித்து உலக வங்கி, சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஆகியவற்றின் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை விவாதித்தாா்.
nirmalawbpauaa07bh092808
nirmalawbpauaa07bh092808

சில நாடுகளின் கடன்களை மறுசீரமைப்பது குறித்து உலக வங்கி, சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஆகியவற்றின் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை விவாதித்தாா்.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்நிலையில், கா்நாடக மாநிலம் பெங்களூரில் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு இடையே மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், உலக வங்கித் தலைவா் டேவிட் மால்பாஸ், ஐஎம்எஃப் நிா்வாக இயக்குநா் கிறிஸ்டலினா ஜாா்ஜியேவா ஆகியோா் தலைமையில் நாடுகளின் கடன் குறித்த வட்டமேசை கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட கடனாளி நாடுகளின் குரல்கள் ஜி20 கூட்டமைப்பு மூலம் கேட்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

சில நாடுகள் கடன் சுமையில் உள்ள நிலையில், அவற்றின் கடன்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது அவசியம் என்று உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் தலைவா்கள் தெரிவித்தனா். கடன் சுமையால் நெருக்கடியை எதிா்கொண்டு வரும் நாடுகளுக்கு உதவவும், கூட்டாக பணியாற்றவும் கடன் தீா்வு மன்றம் நல்லதொரு வாய்ப்பு எனவும் அவா்கள் கூறினா் என்று மத்திய நிதியமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டது.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் அல்லது கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கலாம்.

எண்ம சொத்துகள் குறித்து கூட்டறிக்கை:

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எண்ம (கிரிப்டோ) சொத்துகளை ஒழுங்கப்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த விரிவான கொள்கையை வகுக்கக் கூட்டறிக்கை தயாரிக்குமாறு ஐஎம்எஃப், உலகளாவிய நிதி அமைப்பை கண்காணிக்கும் நிதி ஸ்திரத்தன்மை வாரியம் ஆகியவற்றிடம் இந்தியா கோரியுள்ளது. வரும் அக்டோபரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்களின் 4-ஆவது கூட்டத்தில் அந்த அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com