தேசிய திரைப்படக் காப்பகம், திரைப்படப் பிரிவு உள்ளிட்டவை இணைப்பு!

தேசிய திரைப்படக் காப்பகம், திரைப்படப் பிரிவு உள்ளிட்ட ஊடக பிரிவுகள் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் மத்திய அரசு இணைத்துள்ளது.
தேசிய திரைப்படக் காப்பகம், திரைப்படப் பிரிவு உள்ளிட்டவை இணைப்பு!

தேசிய திரைப்படக் காப்பகம், திரைப்படப் பிரிவு உள்ளிட்ட ஊடக பிரிவுகள் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் மத்திய அரசு இணைத்துள்ளது.

இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களை நிர்வகிப்பதற்காகவும், ஆவணம் செய்வதற்காகவும் திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகிய ஊடக பிரிவுகள் உருவாக்கப்பட்டது.

இந்த ஊடக பிரிவுகள் அனைத்தும் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த நான்கு அமைப்புகளையும்  தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆலோசனையை தொடர்ந்து, 2020-இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த 1,539 பேர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், 2023 ஜனவரி 1 முதல் நான்கு அமைப்புகளும் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்தியில்,

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  ஃபில்ம் டிவிஷன் ஆஃப் இந்தியா, என்எஃப்ஏஐ, டிஎஃப்எஃப் ஆகியவை இழுத்து மூடல். வரலாறு தங்களுக்கு சாதகமாக இல்லாத போது அதை அழிப்பதே கோழைகளின் செயல். வரலாற்றுக் காட்சிகளின் மூலப்பொருட்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்புவோம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com