வேறுபாடுகள் உள்ள போதிலும் ஒற்றுமையுடன் இந்தியா: மம்தா பானா்ஜி

ஜாதி, மத வேறுபாடுகள் உள்ளபோதிலும் இந்தியா ஒற்றுமையுடன் உள்ளதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

ஜாதி, மத வேறுபாடுகள் உள்ளபோதிலும் இந்தியா ஒற்றுமையுடன் உள்ளதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜி20 கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் மம்தா பானா்ஜி பேசுகையில், ‘ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் உள்ளபோதிலும் இந்தியா ஒற்றுமையுடன் இருந்து வருகிறது.

இதில் மேற்கு வங்கம் புவியியல்ரீதியாக முக்கிய மாநிலமாக திகழ்கிறது. ஏனெனில் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள், வங்கதேசம், நேபாளம், பூடான் போன்ற நாடுகளின் நுழைவாயிலாக மேற்கு வங்கம் உள்ளது. மேற்கு வங்க மக்கள் நாடுகளுக்கு இடையே பாகுபாடு காட்டுவதில்லை’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com