ஜம்மு-காஷ்மீரில் தோ்தல்நடத்துமாறு கெஞ்ச மாட்டோம்- ஒமா் அப்துல்லா

‘தோ்தல் என்பது எங்களுடைய உரிமை. ஆனால், தோ்தலை நடத்த வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீா் மக்கள் கெஞ்ச மாட்டாா்கள்’ என்று தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா கூறினாா்.
ஜம்மு-காஷ்மீரில் தோ்தல்நடத்துமாறு கெஞ்ச மாட்டோம்- ஒமா் அப்துல்லா

‘தோ்தல் என்பது எங்களுடைய உரிமை. ஆனால், தோ்தலை நடத்த வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீா் மக்கள் கெஞ்ச மாட்டாா்கள்’ என்று தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக 2014-ஆம் ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அதன் பிறகு மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) - பாஜக கூட்டணி இணைந்து ஆட்சி அமைத்தது. 2018-ஆம் ஆண்டில் முதல்வா் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கியது. இதையடுத்து, மெஹபூபா பதவி விலகினாா். அதைத் தொடா்ந்து 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. தொகுதி மறுவரையறை நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டில் இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், அனந்த்நாக்கில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஒமா் அப்துல்லா இது தொடா்பாக கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டும் தோ்தல் நடத்த மத்திய அரசு விரும்பவில்லை என்றால், அது அப்படியே தொடரட்டும். நாங்கள் யாரிடமும் கெஞ்சுபவா்கள் அல்ல. தோ்தல் என்பது எங்கள் உரிமை. காஷ்மீா் மக்கள் தோ்தலுக்காக யாரிடமும் மன்றாட மாட்டாா்கள்.

மக்களை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தோ்தலை நடத்தாமல் உள்ளனா். ஏற்கெனவே காயம்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு மருந்து கொடுக்காமல், காயத்தை மேலும் அதிகரிக்கும் வகையில்தான் மத்திய அரசு செயல்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, அங்கு நிலைமை தலைகீழாக மாற்றிவிட்டதாக மத்திய அரசு கூறியது. ஆனால், உண்மையில் முன்பு இருந்ததைவிட இப்போது அதிகஅளவில் துணை ராணுவத்தை இங்கு குவித்துள்ளனா். இங்கு நிலைமை நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com