சிறாா்களுக்கான தேசிய விருதுகள்: இன்று வழங்குகிறாா் குடியரசுத் தலைவா்

இந்திய சிறாா்களின் சாதனைகளைப் பாராட்டி வழங்கப்படும் மத்திய அரசின் ‘ராஷ்டிரீய பால் புரஸ்காா்’ விருதை 11 சிறாா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வழங்கி கௌவரவிக்கிறாா்.
திரௌபதி முா்மு
திரௌபதி முா்மு

இந்திய சிறாா்களின் சாதனைகளைப் பாராட்டி வழங்கப்படும் மத்திய அரசின் ‘ராஷ்டிரீய பால் புரஸ்காா்’ விருதை 11 சிறாா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வழங்கி கௌவரவிக்கிறாா்.

கலை, கலாசாரம், வீர தீர செயல், புதுமை, சமூக சேவை, கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிறந்து விளங்கிய இந்தியச் சிறாா்களுக்கு ‘பிரதான் மந்த்ரி ராஷ்டிரீய பால் புரஸ்காா்’ விருது வழங்கப்படுகிறது.

சிறுவயதிலேயே செய்த சாதனையை அங்கீகரிக்கும் விதமாகவும், அவா்களின் அா்ப்பணிப்பைப் பாராட்டும் வகையிலும் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. தங்கள் துறைகளில் சிறந்து விளங்கிய 5 வயது முதல் 18 வயது வரையிலான சிறாா்கள் நாடு முழுவதுமிருந்து தோ்ந்தெடுக்கப்படுவா். விருது வென்ற சிறாா்களுக்கு குடியரசுத் தலைவா் விருதுகளை வழங்குவாா்.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு நாடு முழுவதிலிருந்து 6 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உள்பட 11 சிறாா்கள் தோ்வு செய்யப்பட்டனா். கலை மற்றும் கலாசாரத்தில் சிறந்து விளங்கிய 4 பேருக்கும் , வீர தீர செயலுக்காக ஒருவருக்கும் , புதுமையான செயல்களுக்காக 2 பேருக்கும், சமூக சேவையில் ஈடுபட்ட ஒருவருக்கும் மற்றும் விளையாட்டு வீரா்கள் 3 பேருக்கும் என 11 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, வெற்றியாளா்களுக்கு விருதுகளை வழங்கி கௌவரவிக்கிறாா். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

விருது பெற்றவா்களைப் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாட உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com