உ.பி. முதல்வருக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

ராஜஸ்தானின் மௌ மாவட்டத்தைச் சோ்ந்த கிஷோா் சா்மா என்பவா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத், மத உணா்வுகளுக்கு எதிராகப் பேசினாா். எனவே, அவா் மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், விக்ரம் நாத் ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற மனுக்கள் செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன என்று கூறி மனுவை நிராகரித்தனா்.

முன்னதாக, இந்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றமும் நிராகரித்தது. அப்போது மனுதாரருக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கு முன்பு மாவட்ட நீதிமன்றமும் இந்த மனுவை நிராகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com