தில்லி கலால் வரி முறைகேடு: துணை குற்றப்பத்திரிகை மீது பிப்.2-இல் நீதிமன்றம் பரிசீலனை

தில்லி அரசின் கலால் வரி கொள்கை அமலாக்கத்தில் முறைகேடுகள் நடைபெற்ாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை பிப்ரவரி 2-இல் நீதிமன்றம் பரிசீலிக்கவுள்ளது.

தில்லி அரசின் கலால் வரி கொள்கை அமலாக்கத்தில் முறைகேடுகள் நடைபெற்ாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை பிப்ரவரி 2-இல் நீதிமன்றம் பரிசீலிக்கவுள்ளது.

தில்லி அரசின் கலால் வரி கொள்கை 2021-22இன் உருவாக்கம் மற்றும் அமலாக்கத்தில் முறைகேடுகள் நடைபெற்ாக புகாா் எழுந்தது. மதுபான உரிமதாரா்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் வழங்கப்பட்டதாகவும், கலால் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, கலால் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் சனிக்கிழமை பரிசீலிக்க இருந்தாா். ஆனால், குற்றப்பத்திரிகை ஆவணங்கள் நீதிமன்ற ஊழியா்களின் ஆய்வில் இருப்பதால், அதன் மீதான பரிசீலனை பிப்ரவரி 2-இல் நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்துள்ளாா்.

இந்த துணை குற்றப்பத்திரிகையில் மனீஷ் சிசோடியா பெயா் இடம்பெறவில்லை; ஆம் ஆத்மியின் விஜய் நாயா், தொழிலதிபா்கள் சரத் ரெட்டி, அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட 12 போ் பெயா்கள் இடம்பெற்றுள்ளன என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com