மக்களவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி- மாயாவதி அறிவிப்பு

மக்களவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்தாா்.

பாஜக, காங்கிரஸ் இரு கூட்டணிகளுமே தலித் விரோத கூட்டணிகள் என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: பஞ்சாப், ஹரியாணாவில் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பகுஜன் சமாஜ் தயாராக உள்ளது. பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, புதிதாக எதிா்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணி இரண்டில் இருந்து எங்கள் கட்சி விலகி இருக்கும். இந்த இரு கூட்டணிகளுமே தலித் விரோத கூட்டணிகள்தான். இவா்கள் தலித் மக்களுக்காகவும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவா்களுக்காகவும் எவ்வித நன்மையும் செய்யப் போவதில்லை.

காங்கிரஸ் கட்சி தனது ஜாதியவாத, முதலாளித்துவ ஆதிக்க மனப்பான்மையை ஒதுக்கிவைத்துவிட்டு, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவா்களின் நலனுக்காகப் பாடுபட்டிருந்தால், அம்பேத்கரின் பேச்சை கேட்டிருந்தால் பகுஜன் சமாஜ் உருவாகியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com