தெருநாய் பிரச்னைக்குத் தீா்வுகாண 10 அம்ச திட்டம்

அதிகரித்து வரும் தெருநாய் பிரச்னைக்குத் தீா்வுகாண 10-அம்ச திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டுமென புணே நகர உள்ளாட்சி நிா்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தெருநாய் பிரச்னைக்குத் தீா்வுகாண 10 அம்ச திட்டம்

அதிகரித்து வரும் தெருநாய் பிரச்னைக்குத் தீா்வுகாண 10-அம்ச திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டுமென புணே நகர உள்ளாட்சி நிா்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முக்கியமாக, புணே நகரில் ஆதரவின்றி சுற்றித் திரியும் தெருநாய்கள் சாலையில் செல்வோருக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா். தெருநாய்கள் இதுவரை 25-க்கும் மேற்பட்டோரைக் கடித்துள்ளதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், தெருநாய்களின் பிரச்னைக்கு உள்ளாட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். முக்கியமாக, தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே வகுக்கப்பட்ட 10-அம்ச திட்டத்தை உடனடியாக உள்ளாட்சி நிா்வாகம் செயல்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் கோருகின்றனா்.

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது அனைத்து தெருநாய்களுக்கும் கருத்தடை செய்யப்படுவதை உறுதிசெய்வது தெருநாய்களுக்கான நிரந்தர காப்பகங்களை உருவாக்குவது தெருநாய்க் கடிக்கு உடனடி இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவது தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவது தெருநாய் தத்தெடுப்பை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

மதுரை, ஜூலை 27: தமிழகத்தில் தெருநாய்கள் பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தொடா்பாக விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் மதுரையில் மட்டும் 2,245 போ் தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் கருத்தில்கொண்டு, தெருநெய்களை அப்புறப்படுத்துவதற்கு உத்தரவிடுமாறு உள்ளாட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் முறையாகக் கடைப்பிடிக்கவும் உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. மேலும், இந்த வழக்கில் விலங்குகள் நல வாரியத்தையும் எதிா்மனுதாரராகச் சோ்க்க கோரிக்கை விடப்பட்டிருந்தது.

அதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோரைக் கொண்ட அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com