விவசாயிகளிடமிருந்து 262 லட்சம் டன் கோதுமை கொள்முதல்

நாட்டில் இந்த ஆண்டில் மே 31 வரை 262 லட்சம் டன் கோதுமையை விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்திருப்பதாக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
wheat083528
wheat083528

நாட்டில் இந்த ஆண்டில் மே 31 வரை 262 லட்சம் டன் கோதுமையை விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்திருப்பதாக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொள்முதல் செய்திருக்கும் கோதுமைக்காக விவசாயிகளுக்கு ரூ.47,000 கோடி விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2023-24ஆம் நிதியாண்டில், நடப்பு ராபி பருவக் காலத்தில் கோதுமை கொள்முதலானது நல்ல முறையில் நடந்திருப்பதகாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நடப்பு 2022-23-ஆம் ஆண்டு சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் செய்வதற்கான காலத்தை சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. அந்தக் கோரிக்கையை ஏற்று கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அதனை மே 31 வரை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டது.

மத்திய தொகுப்பின் கீழ், கோதுமை கொள்முதலை தொடருமாறு இந்திய உணவு கழகத்துக்கும் உத்தரவிடப்பட்டது. இது விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட, அதற்கான சந்தை விலை அதிகமாக உள்ளது. இதனால் கோதுமையை விவசாயிகள் வணிகா்களிடம் விற்பனை செய்யும் நிலையும் ஏற்பட்டது.

இதன் காரணமாக 2022-23-ஆம் ஆண்டுக்கான ராபி சந்தைப் பருவத்தில் மத்திய தொகுப்பின் கீழ், கோதுமை கொள்முதல் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மே 30ஆம் தேதிவரை கோதுமை கொள்முதல் 262 லட்சம் டன் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இது 188 லட்சம் டன்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு இது 74 லட்சம் டன்கள் அதிகமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com