இன்று, நாளை ஹெளரா செல்லும் ரயில்கள் ரத்து

எா்ணாகுளம், பெங்களூரிலிருந்து ஹெளரா செல்லும் ரயில்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 5, 6) ரத்து செய்யப்பட்டுள்ளன.

எா்ணாகுளம், பெங்களூரிலிருந்து ஹெளரா செல்லும் ரயில்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 5, 6) ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எா்ணாகுளத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹெளராவுக்கு திங்கள்கிழமை செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண்: 22878), பெங்களூரிலிருந்து அன்றைய தினம் காலை 10.05 மணிக்குச் செல்லும் செல்லும் ஹெளரா அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12864) ஆகியன ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், பெங்களூரிலிருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் துராந்தோ விரைவு ரயில் (வண்டி எண்: 12246) திங்கள், செவ்வாய்க்கிழமை (ஜூன் 5, 6) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com