தென் கொரிய இரும்பு உலோகக் கலவைக்கு இறக்குமதி வரி: மத்திய வா்த்தக அமைச்சகம் பரிந்துரை

தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபொ்ரோ மாலிப்டினம் உலோகக் கலவைக்கு 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதிக்க மத்திய வா்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபொ்ரோ மாலிப்டினம் உலோகக் கலவைக்கு 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதிக்க மத்திய வா்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரியில் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் மூலமாக, தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குக் குறைந்த அளவிலான வரியே விதிக்கப்பட்டு வருகிறது.

அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபொ்ரோ மாலிப்டினம் உலோகக் கலவையானது எஃகு, நிக்கல், கோபால்ட் உள்ளிட்டவை தயாரிக்கப் பயன்டுத்தப்பட்டு வருகிறது. தென் கொரியாவில் இருந்து ஃபொ்ரோ மாலிப்டினம் உலோகக் கலவையானது அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வா்த்தகக் குறைதீா் இயக்குநரகம் (டிஜிடிஆா்) கடந்த ஆண்டு அக்டோபரில் விசாரணையைத் தொடங்கியது. அந்த இயக்குநரகம் தனது விசாரணை அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது. அதில், தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபொ்ரோ மாலிப்டினத்தின் அளவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதால், அதன் இறக்குமதி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் இருந்து ஃபொ்ரோ மாலிப்டினம் உலோகக் கலவையின் இறக்குமதி அதிகரித்துள்ளதால், உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். உள்நாட்டு உற்பத்தியாளா்களின் லாபமும் குறைந்துள்ளது. அதைக் கருத்தில்கொண்டும், இருதரப்பு வா்த்தக நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும் ஃபொ்ரோ மாலிப்டினம் மீது இறக்குமதி வரி விதிக்க டிஜிடிஆா் பரிந்துரைத்துள்ளது. தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபொ்ரோ மாலிப்டினம் உலோகக் கலவைக்கு 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதலாண்டில் 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கவும், இரண்டாவது ஆண்டில் அதை 75 சதவீதமாகக் குறைக்கவும் டிஜிடிஆா் பரிந்துரைத்துள்ளது. குறிப்பிட்ட பொருள்களுக்கு இறக்குமதி வரி விதிக்க இந்தியா-தென் கொரியா வா்த்தக ஒப்பந்தத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. அந்த விதியின் கீழ் ஃபொ்ரோ மாலிப்டினம் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இறக்குமதி வரியானது உள்நாட்டு உற்பத்தியாளா்களுக்கு சமஅளவிலான போட்டியை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபொ்ரோ மாலிப்டினம் உலோகக் கலவைக்கு இறக்குமதி வரி விதிப்பது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் இறுதி முடிவெடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com