ஒடிசா விபத்து: உடல்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கும் உறவினர்கள்

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணா முடியாமல் பல உறவினர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒடிசா விபத்து: உடல்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கும் உறவினர்கள்


ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணா முடியாமல் பல உறவினர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பலியான 275 பேரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக மரபணு சோதனை மேற்கொள்ளும் பணியை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கியிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் எய்ம்ஸ் - புவனேஸ்வரம் மருத்துவமனையில், ரயில் விபத்தில் பலியாகி, அடையாளம் காணப்படாத உடல்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல, தங்களது உறவினர்களைக் காணவில்லை என்று மருத்துவமனைக்குத் தேடி வருவோரின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, அவர்களது மரபணு, இறந்தவர்களில் எந்த உடலுடன் பொருந்துகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் உடல்களை ஒப்படைக்கும் பணி தொடங்கியிருக்கிறது.

ரயில் விபத்தில் சிக்கிய பலரின் உடல்கள்  அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு சேதமடைந்துவிட்டன. இதனால், பல உடல்களை நெருங்கிய உறவினர்களாலேயே உறுதியாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்குத் தீர்வு காண மரபணு சோதனைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில் பலியான 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படாமல், ஒடிசா மாநில அரசால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. தங்களது காணாமல் போன உறவினர்களின் புகைப்படங்களுடன் வருவோர், இந்த உடல்களைப் பார்த்து அடையாளம் காணும் பணியும் ஒருபக்கம் நடந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com