மகாராஷ்டிராவில் ரூ.519 கோடி நீர் சுரங்கப் பாதை திட்டத்தை கைப்பற்றியது படேல் என்ஜினியரிங்

நீர் சுரங்கப்பாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளை அமைக்க படேல் இன்ஜினியரிங் நிறுவனம், சிட்டி அண்ட் இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்றுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுதில்லி: மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் 6.70 கிமீ நீளமுள்ள சுத்திகரிக்கப்பட்ட நீர் சுரங்கப்பாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளை அமைக்க படேல் என்ஜினியரிங் நிறுவனம், சிட்டி அண்ட் இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்றுள்ளது.

ரூ.519.50 கோடி மதிப்பிலான இந்த திட்டம் கூட்டு முயற்சி இல்லாமல் நிறைவேற்றப்படும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து படேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரூபன் படேல் தெரிவித்ததாவது:

இந்த நிறுவனத்திற்கு இது ஒரு மதிப்புமிக்க திட்டமாகும். இந்த திட்டம் எங்கள் தொழில்நுட்ப திறன் மற்றும் பொறியியல் திறன்களையும், சிறந்த செயலாக்க திறன்களையும் நிரூபிக்கும்.

அதே வேளையில் ஏலத்தில் குறிப்பிட்டுள்ளபடி, 60 மாதங்களுக்குள் இந்ததிட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுரங்கம் தோண்டுதல், நீர்மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிலத்தடி பணிகளில் நிபுணத்துவம் பெற்ற நாங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com