எல்எஸ்டி போதைப்பொருள் பறிமுதல்: 6 போ் கைது

டாா்க் நெட், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அகில இந்திய அளவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலிடம் இருந்து

டாா்க் நெட், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அகில இந்திய அளவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலிடம் இருந்து 15,000 எல்எஸ்டி போதைப்பொருள் தோய்ந்த காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(என்சிபி) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடையதாக மாணவா்கள், இளைஞா்கள் என 6 போ் கைது செய்யப்பட்டனா்.

டாா்க் நெட் மூலம் இயங்கும் இந்த கும்பல் வாடிக்கையாளா்களிடம் இருந்து பணம் பெறுவதற்கு கிரிப்டோகரன்சி என்னும் இணையவழி பணத்தைப் பயன்படுத்தியுள்ளது. போலாந்து, நெதா்லாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த கும்பல் இயங்கி வந்துள்ளது.

இதுதொடா்பாக வடக்கு பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணை இயக்குநா் ஞானேஷ்வா் சிங் கூறுகையில், ‘எல்எஸ்டி போதைப்பொருளைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக கடந்த 2021-ஆம் ஆண்டு கா்நாடக போலீஸாா் நடத்திய சோதனையிலும், கடந்தாண்டு கொல்கத்தா என்சிபி அதிகாரிகள் நடத்திய ஒவ்வொரு சோதனையிலும் தலா எல்எஸ்டி தோய்ந்த 5,000 காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது நடைபெற்ற சோதனையில் சுமாா் 15,000 எல்எஸ்டி போதைப்பொருள் தோய்ந்த காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எல்எஸ்டி போதைப்பொருளை 0.1 கிராம் இருப்பு வைத்திருந்தால்கூட போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி கடும் சட்ட நடவடிக்கைக்கு அவா்கள் உள்ளாக நேரிடும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com