இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 200 விமான நிலையங்கள், நீர் விமான நிலையங்கள் அமைக்க இலக்கு

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 200-220 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் நீர் விமான நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Jyotiraditya Scindia
Jyotiraditya Scindia

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 200-220 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் நீர் விமான நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் மேலும் 200 முதல் 220 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் நீர் விமான நிலையங்கள் கட்டப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளில் விமானத் துறையில் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தி மத்திய அமைச்சர் தலைநகரில் செய்தியாளர்களிடம் பேசினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந்த 68 ஆண்டுகளில் அரசாங்கங்கள் எதை செய்ததோ, அதை மோடி அரசு 9 ஆண்டுகளில் செய்துள்ளது. அதே வேளையில் எண்ணிக்கை 74ல் இருந்து 148 ஆக உயர்ந்துள்ளது. ஹெலிபோர்ட்கள் உள்பட நீர் ஏரோட்ரோம்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 200 முதல் 220ஐ உருவாக்க இலக்கு வைத்துள்ளோம் என்றார்.

அதே வேளையில் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் எட்டு விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் இல்லாத பிராந்தியத்தில் சில மாநிலங்கள் இருந்தன. ஆனால் இன்று அருணாச்சல பிரதேசத்தில் மூன்று புதிய விமான நிலையங்கள் உள்ளன, சிக்கிமிலும் இப்போது ஒரு விமான நிலையம் உள்ளது என்றார்.

மெட்ரோ குறித்து பேசிய அமைச்சர், எங்களிடம் தற்போது ஆறு பெரிய பெருநகரங்கள் உள்ளன. பெருநகரங்களான மும்பை, தில்லி, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவற்றின் கொள்ளளவு தற்போது 22 கோடியாகும். அடுத்த எட்டு ஆண்டுகளில் ஜேவர் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட இந்த ஆறு பெருநகரங்களின் திறனை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என்றார்.

மோடி அரசு ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு 'மெகா ஜன்-சம்பர்க் அபியான்' திட்டத்தின் கீழ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.  இதில் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் ஒவ்வொரும் மாநிலத்தின் தலைநகரங்களுக்கும் சென்று கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்கிய அரசு செய்த பணிகளை விளக்குவோம் என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com