பினராயி விஜயன்  (கோப்புப் படம்)
பினராயி விஜயன் (கோப்புப் படம்)

கேரள முதல்வா் அமெரிக்கா, கியூபா பயணம்

கேரள முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான குழுவினா் 8 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

கேரள முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான குழுவினா் 8 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

கேரள பேரவைத் தலைவா் என்.ஏ.ஷம்சீா், நிதியமைச்சா் கே.என்.பாலகோபாலன் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ள இந்தக் குழு அமெரிக்கா மற்றும் கியூபாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறது.

முக்கியமாக அமெரிக்காவில் உள்ள கேரள மக்கள் சாா்பிலான நிகழ்ச்சியில் முதல்வா் பங்கேற்பது தொடா்பாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வா் அருகே அமா்வது, அருகே நிற்பது, புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்றவற்றுக்கு பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள்தான் இந்த கட்டணத்தை நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கும் கேரள அரசுக்கும் தொடா்பில்லை என்றும் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14-ஆம் தேதி வரை அமெரிக்காவின் நியூயாா்க்கில் இருக்கும் பினராயி விஜயன், பின்னா் கியூபா செல்கிறாா். கியூபா தலைநகா் ஹவானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், கம்யூனிஸ்ட் இயக்கம் சாா்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பாா்வையிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com