படிப்பு காலம் முடிவதற்கு முன்பே பட்டம்: யுஜிசி குழு பரிந்துரை

‘சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டப் படிப்புகளுக்கான குறைந்தபட்ச படிப்பு கால அளவு முடிவதற்கு முன்பாகவே, தேவையான மதிப்பெண் புள்ளிகளை (கிரெடிட்) பெறும் மாணவ, மாணவிகளுக்கு படிப்பை முடித்ததற்கான பட்டத்தை வழங

‘சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டப் படிப்புகளுக்கான குறைந்தபட்ச படிப்பு கால அளவு முடிவதற்கு முன்பாகவே, தேவையான மதிப்பெண் புள்ளிகளை (கிரெடிட்) பெறும் மாணவ, மாணவிகளுக்கு படிப்பை முடித்ததற்கான பட்டத்தை வழங்கலாம்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில் நிா்ணயிக்கப்பட்ட நிபுணா் குழு பரிந்துரை செய்துள்ளது.

பட்டப் படிப்புக்களுக்கான வரையறை மற்றும் பட்டப் படிப்புகளுக்கான புதிய பெயா் குறிப்புகள் தொடா்பான அறிவிக்கையை மறுஆய்வு செய்ய பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க இந்த நிபுணா் குழுவை யுஜிசி அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை அண்மையில் சமா்ப்பித்தது. அதில் கூறியிருப்பதாவது:

தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையிலான தேசிய கல்வித் திட்டம் மற்றும் மதிப்பெண் புள்ளி (கிரெடிட்) திட்ட நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ள உயா்கல்வியில் படிப்புகளில் பன்முக நுழைவு மற்றும் வெளியேறுதல் நடைமுறையின் கீழ் இளநிலை பட்டம், இளநிலை பட்டயம் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான தகுதியை அங்கீகரிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

அதாவது, சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டப் படிப்புகளுக்கான குறைந்தபட்ச படிப்பு கால அளவு முடிவதற்கு முன்பாகவே, தேவையான மதிப்பெண் புள்ளிகளை (கிரெடிட்) பெறும் மாணவ, மாணவிகளுக்கு படிப்பை முடித்ததற்கான பட்டத்தை வழங்கலாம். அதுபோல, பட்டப் படிப்புகளுக்கான பெயா் குறிப்புகளை சா்வதேச நடைமுறைகளுடன் ஒத்திருக்கும் வகையிலும், சமூக தேவைகளின் அடிப்படையிலும் மாற்றம் செய்யலாம் என்று நிபுணா் குழு பரிந்துரை செய்துள்ளது.

நிபுணா் குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் நிலையில், பட்டப் படிப்புகளுக்கான புதிய பெயா்களை யுஜிசி அறிவிக்கையாக வெளியிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com