ஹைதராபாத்தில் ஜூன் 15ஆம் தேதி ஜி-20 விவசாய அமைச்சர்கள் மாநாடு தொடக்கம்

நிலையான விவசாயம், பருவநிலை தீர்வுகள், பெண்கள் தலைமையிலான விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஹைதராபாத்தில் 3 நாள் ஜி-20 விவசாய அமைச்சர்கள் கூட்டம் நாளை தொடங்குகிறது.
ஹைதராபாத்தில் ஜூன் 15ஆம் தேதி ஜி-20 விவசாய அமைச்சர்கள் மாநாடு தொடக்கம்

புதுதில்லி: நிலையான விவசாயம், பருவநிலை தீர்வுகள், பெண்கள் தலைமையிலான விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஹைதராபாத்தில் நாளை (வியாழக்கிழமை) 3 நாள் ஜி-20 விவசாய அமைச்சர்கள் கூட்டம் தொடங்குகிறது.

ஜி-20 உறுப்பு நாடுகள், அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் உலகளாவிய அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேளாண் அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் இயக்குநர் ஜெனரல்களும் பங்கேற்கின்றனர்.

முதல் நாளில், விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் இந்தியாவின் சாதனைகளை விளக்கும் கண்காட்சியை மத்திய வேளாண் இணை அமைச்சர் கைலாஷ் செளத்ரி தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவைத் தொடர்ந்து வேளாண் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாதியில், வேளாண் வணிகத்தை லாபத்திற்காக நிர்வகித்தல், விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துதல், இந்திய விவசாயம் சார்ந்த நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் பங்கேற்புடன் வேளாண் வணிகத்தை மேம்படுத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். 

இரண்டாவது நாளில், மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஜி-20 நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்கள் மற்றும் ஜி-20 கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் மற்ற தலைவர்களை வரவேற்பார்.  அன்றைய தினம் நடைபெறும் அமைச்சர்களின் பங்கேற்புகளில், உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான நிலையான விவசாயம் என்ற தலைப்பில் விவாதங்களும் இடம்பெறும்.

மூன்றாவது நாளில், குடியரசுத் தலைவர் கீழ் உள்ள ஜி-20 விவசாய பணிக்குழுவின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதோடு அமைச்சர்களின் கூட்டம் முடிவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com