யோகா மனிதகுலத்திற்கு இந்தியா தந்த பரிசு- யோகி ஆதித்யநாத்

யோகா, மனிதகுல நலனுக்காக இந்தியா அளித்துள்ள பரிசு என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
யோகா மனிதகுலத்திற்கு இந்தியா தந்த பரிசு- யோகி ஆதித்யநாத்

கோரக்பூர்: யோகா, மனிதகுல நலனுக்காக இந்தியா அளித்துள்ள பரிசு என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு, நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், "உலகம் கோவிட் பெரும் தொற்றால் சிக்கியிருந்தபோது, இந்தியாவின் ஆயுஷ் மருத்துவமுறை தான் உலகத்தின் அதிக தேவையாக இருந்தது. யோக மனிதகுல நலனுக்காக இந்திய அளித்துள்ள பரிசு, அது நமது உடலில் உறுதித்தன்மை மட்டுமல்லது, உடல் பலத்தினை அதிகரிக்கவும் உதவுகிறது" என கூறினார்.

மேடையிலயே யோகாசனம் செய்து காட்டிய முதல்வர்," யோகா மட்டுமே உலக நலனில்  நம்மை முன்னோக்கி எடுத்து செல்லும், யோகா  ஆயிரம் ஆண்டுகள் பழமையானது மட்டுமல்ல, இது நம் நாட்டின் பெருமை மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதி" என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

மேலும் “இன்று யோகா என்றால் உலக அரங்கில் தெரியும், யோகா உலகை தன்பக்கம் இழுக்கிறது, இச்சாதனைக்கு நம் அனைவரும் பெருமைப்படவேண்டும், ஒரு யோகிக்கு, யோகா  என்பது ஆன்மிகத்திற்குள் நுழைவதற்கான ஒரு வாசலாகும், எனவே மக்கள் தங்கள் அன்றாட வாழ்வினில்,யோகாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com