‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்தார். 
‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்தார். 

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

சென்னையில் நடைபெறும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா,உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் சென்னையில் நடைபெறும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் கூட்டத்தில் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, “இந்தியா தற்போது மோசமான சூழலில் உள்ளது. அரசியலமைப்பு, ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரும், தமிழ்நாடும் வேறு வேறு சூழல் நிலையில் உள்ளன. ஆனால் இரு மாநிலங்களுக்கும் பொதுவான சூழல் உள்ளது. அது நாட்டை வலிமையானதாக மாற்றுவதாகும். 

இந்த மேடையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை ஒருங்கிணையுங்கள். எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் இந்தியர்கள். இன்றைக்கு நான் தெரிவித்துக் கொள்வதெல்லாம் நாம் ஒற்றுமையாக இருந்து இயங்க வேண்டும். மக்களுக்கு பசி உள்ளது, வேலைவாய்ப்பு இல்லை. மக்கள்தான் இந்தியாவை வலிமையானதாக மாற்றுவார்கள்.

நாம் ஒருங்கிணைந்து இணைந்து செயல்பட்டால் இந்தியா மாறும். நாம் கட்டாயம் வெல்வோம். ஸ்டாலின் இதுதான் நேரம். தமிழ்நாட்டை உருவாக்கியதுபோல் நாட்டை உருவாக்குங்கள். யார் பிரதமர் வேட்பாளர் என கேட்கின்றனர்? முதலில் தேர்தலில் வெல்வோம். பிறகு பிரதமர் பற்றி பேசுவோம். நான் புதிய இளமையான இந்தியாவை பார்க்கிறேன். நம்மிடம் வேற்றுமைகள் உள்ளன. ஆனால் சிறந்த இந்தியாவை உருவாக்க நான் ஒன்றிணைந்து செயல்படுவோம் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com