இன்வெர்ட்டர் அடிப்படையிலான ஏ.சி.க்களின் சந்தை 77 சதவீதம் உயரும்: மின் அமைச்சகம்

இன்வெர்ட்டர் அடிப்படையிலான ரூம் ஏர் கண்டிஷனர்களின் சந்தை 2022-23ஆம் ஆண்டில் கணிசமாக அதிகரித்து 77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுதில்லி: இன்வெர்ட்டர் அடிப்படையிலான ரூம் ஏர் கண்டிஷனர்களின் சந்தை 2022-23ஆம் ஆண்டில் கணிசமாக அதிகரித்து 77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுவே 2015-16ஆம் நிதியாண்டில் இன்வெர்ட்டர் மூலம் இயங்கும் ஏசிக்களின் சந்தைப் பங்கு வெறும் 1 சதவீதமாக மட்டுமே இருந்தது.

2015-16 முதல் 2022-23 வரையிலான எட்டு ஆண்டுகளில், மிகவும் திறமையான, மாறும் வேகம் கொண்ட இன்வெர்ட்டர் ஏசி சந்தை பங்கு 1 சதவீதத்திலிருந்து 77 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நிலையான ஏசி-யின் சந்தை பங்கு 99 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக குறைந்துள்ளது.

ஏசிகளுக்கான ஒட்டுமொத்த சந்தை 2015ஆம் ஆண்டில் 47 லட்சத்திலிருந்து இருந்து 2020-21ஆம் ஆண்டில் 66 லட்சம் யூனிட்டுகளை எட்டியுள்ளது.

மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எரிசக்தி திறன் பணியகத்தின் தரவுகளின்படி, ஸ்பிலிட் ஏசிகளுக்கு, ஒட்டுமொத்த ஆற்றல் திறன் மேம்பாடு 1 நட்சத்திரத்திற்கு 43 சதவீதமாகவும், 5-நட்சத்திர நிலைக்கு 61 சதவீதமாகவும் உள்ளது. மறுபுறம், விண்டோ ஏசிகளுக்கான ஒட்டுமொத்த ஆற்றல் திறன் மேம்பாடு 1-ஸ்டாருக்கு 17 சதவீதமும், 5-ஸ்டார் நிலைக்கு 13 சதவீதமாகவும் உள்ளது.

ஆற்றல் செயல்திறனின் சரத்தை அதிகரிக்க ஸ்பிளிட் மற்றும் விண்டோ ஏசிகளுக்கான நட்சத்திர மதிப்பீட்டு திட்டங்களை பிஇஇ திருத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com