இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தலைவராக தினேஷ் நியமனம்

2023-24ம் ஆண்டிற்கான சிஐஐ தலைவராக டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக துணைத் தலைவர் ஆர்.தினேஷ் பொறுப்பேற்றுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுதில்லி: 2023-24ம் ஆண்டிற்கான சிஐஐ தலைவராக டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக துணைத் தலைவர் ஆர்.தினேஷ் பொறுப்பேற்றுள்ளார்.

பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சஞ்சீவ் பஜாஜிடமிருந்து அவர் பொறுப்பேற்றார்.

ஐடிசி நிர்வாக தலைவர் மற்றும் இயக்குநர் சஞ்சீவ் பூரி 2023-24 ஆம் ஆண்டிற்கான இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2023-24ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் கூட்டத்தின் புதிய நிர்வாகிகள் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.

2023-24ம் ஆண்டுக்கான இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் துணைத் தலைவராக ராஜீவ் மேமானி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் இந்திய பிராந்தியத்தின் தலைவர் என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com