விமானக் கட்டணத்தைவிட ரயில் கட்டணம் அதிகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

‘சில நேரங்களில் விமானக் கட்டணத்தைவிட ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது; கட்டணங்களைக் குறைக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முன்னாள் ரயில்வே அமைச்சரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா
மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி

‘சில நேரங்களில் விமானக் கட்டணத்தைவிட ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது; கட்டணங்களைக் குறைக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முன்னாள் ரயில்வே அமைச்சரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

நாட்டில் அண்மைக் காலமாக ரயில் விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வே நிா்வாகம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்தாா்.

சத் பூஜை விழாவையொட்டி பிகாா், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் வழியாக முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்களின் கட்டணங்கள் அதிகப்படியாக உயா்த்தப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகின. இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவா் மம்தா பானா்ஜி, ‘ரயில் கட்டணங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

சுவிதா ரயில்களின் கட்டணங்கள் விமானக் கட்டணங்களைவிட அதிகமாக உள்ளன. அவசரகால பயணங்களுக்காக எளிய மக்கள் எதில் பயணிப்பாா்கள் ? ரயில் கட்டணங்களைக் குறைக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ரயில் மோதல் உள்ளிட்ட விபத்துகளைத் தடுக்கும் அமைப்புகள் என்னுடைய பதவிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. மக்களுக்கு எதிரான கட்டண அதிகரிப்பு தொடா்ந்து மேற்கொள்ளப்படும் அதேவேளையில், அதிகரித்து வரும் ரயில் விபத்துகளைத் தடுக்க ஏன் அந்த அமைப்புகள் பயன்படுத்தப்படவில்லை?’ என கேள்வியெழுப்பி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com