தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜா சிங் மீண்டும் பாஜகவில் சேர்ப்பு

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து தெரித்தமைக்காக பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜாசிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். 
தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜா சிங் மீண்டும் பாஜகவில் சேர்ப்பு

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து தெரித்தமைக்காக பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜாசிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் ராஜா சிங் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து அவர் கட்சியில் மீண்டும் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜா சிங் பதிவேற்றம் செய்து, பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பிற தலைவர்களும் அவர் நன்றி கூறியுள்ளார். நகைச்சுவை நடிகா் முனாவா் ஃபரூக்கி கடந்த ஆண்டு ஹைதராபாதில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றாா். 

அவரை விமா்சித்து கோஷமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங், விடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டாா். அதில் இஸ்லாத்துக்கு எதிராகவும், இறைத் தூதா் நபிகள் நாயகத்தை விமா்சித்தும் அவா் பேசியதாக தெரிகிறது. இதையறிந்த இஸ்லாமியா்கள், ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி ஹைதராபாதில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி, தபீா்புரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், மதத்தின் பெயரில் இருபிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துதல்; தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்படுவது; மத உணா்வை வேண்டுமென்றே புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தபீா்புரா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜா சிங்கை கைது செய்தனா்.

ராஜா சிங்கை அங்குள்ள கீழ் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது கைதுக்கு முன்பு ராஜா சிங்குக்கு நோட்டீஸை அளிக்காமல் உச்சநீதிமன்ற உத்தரவை போலீஸாா் மீறியுள்ளனா் என்று அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா். இதையடுத்து, ராஜா சிங்குக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ராஜா சிங்கை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக அறிவித்தது. 

மேலும், சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ராஜா சிங்கை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக அறிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய பாஜக ஒழுங்குமுறை கமிட்டி செயலாளா் ஓம் பாடக், ‘உங்களை ஏன் கட்சியிலிருந்து நீக்கக் கூடாது?’ என கேள்வி எழுப்பியதுடன், செப்டம்பா் 2-க்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com