கர்நாடக தேர்தலுக்கான 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 45 வேட்பாளர்களின் 4-வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டது.
கர்நாடக தேர்தலுக்கான 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி!


பெங்களூரு: கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 45 வேட்பாளர்களின் 4-வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் ஊடக மற்றும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் பிரிஜேஷ் கலப்பா கூறுகையில், வேட்பாளர்களில் 16 பேர் விவசாயிகள், 13 பெண்கள், 18 வழக்கறிஞர்கள், 10 மருத்துவர்கள், 10 பொறியாளர்கள், 10 முனைவர் பட்டம் பெற்றவர்கள், 41 முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் 82 பட்டதாரிகள் அடங்குவர்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒரு ஆச்சரியத்தை உருவாக்கி கர்நாடக சட்டமன்றத்தில் நுழையும் என்று நம்புகிறது.

இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று முதல் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொள்கிறார். இரண்டு நாட்கள் அம்மாநிலத்தில் தங்கி வட கர்நாடகாவில் சாலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அதே போல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் விவசாயிகள் பேரணியிலும் அவர் பங்கேற்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தாவும் நாளை (புதன்கிழமை) பெங்களூரு வரும் நிலையில், அவர் மூன்று நிகழ்வில் பங்கேற்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com