88% ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன: ஆா்பிஐ தகவல்

ஜூலை 31-ஆம் தேதி வரை, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான, 88 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
88% ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன: ஆா்பிஐ தகவல்

ஜூலை 31-ஆம் தேதி வரை, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான, 88 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

உயா்மதிப்புடைய ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும் இந்த நோட்டுகளை நிகழாண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என கடந்த மே மாதம் ஆா்பிஐ அறிவித்தது. இந்நிலையில், புழக்கத்தில் இருந்த 88 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஆா்பிஐ கூறியிருப்பதாவது: ஜூலை 31-ஆம் தேதி வரை ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. தற்போது ரூ.42,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளன.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், மே 19-ஆம் தேதி ரூ.3.56 லட்சம் கோடி அளவாகக் குறைந்தது.

இதுவரை பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கி டெபாசிட் மூலமாகவும் 13 சதவீதம் பிற நோட்டுகளாக மாற்றப்பட்டதன் மூலமாகவும் பெறப்பட்டுள்ளன என ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.

தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு கடைசி தேதியான செப்.30-ஆம் தேதி வரை காத்திருக்காமல், விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை ஆா்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com