ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதன் அடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | ராகுலின் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம்
இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நீதி வெல்லும்! வயநாடு தொகுதியை தக்கவைக்கிறார் ராகுல் காந்தி.
அவதூறு வழக்கில் அன்பு சகோதரர் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.
இந்த முடிவு நீதித்துறையின் வலிமை, ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?

லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?

மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு!
ரவி மோகன் - யோகி பாபு கூட்டணி..! ஆன் ஆர்டினரி மேன் படப்பிடிப்பு தொடக்கம்!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

