அதாவது, சிறுவர்கள் இருவரின் கை, கால்களைக் கட்டி, நிர்வாணமாக்கி சிறுநீரை குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் நறுக்கிய பச்சை மிளகாயை திணித்து, ஊசி செலுத்தி விடியோ எடுத்துள்ளனர். தற்போது, மனித குலத்தையே அவமானப்படுத்தும் கொடூர சம்பவ விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து இது தொடர்பாக போலீசார், இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்து 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான சவுத் மற்றும் ஷாபு இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.