சா்வதேச விலையைப் பொருத்து பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படும்

சா்வதேச கச்சா எண்ணெய் விலை 80 டாலருக்குகீழ் குறையும்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பொதுத் துறை பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சா்வதேச விலையைப் பொருத்து பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படும்

சா்வதேச கச்சா எண்ணெய் விலை 80 டாலருக்குகீழ் குறையும்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பொதுத் துறை பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றங்கள் ஏதும் இல்லை.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘சா்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களால், விலையில் அதிக அளவிலான மாற்றங்கள் ஏற்படுகிறன்றன. லிட்டருக்கு ரூ.1-ஐ பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கும்போது, அதை அனைவரும் பாராட்டுவா். ஆனால், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, விலை ஏற்றத்துக்கு அனுமதிக்கப்படுமா என்பது சந்தேகமே. டீசல் விற்பனையில் சில நாள்கள் லாபங்கள் இருந்தாலும், சில நாள்கள் நஷ்டங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் விலையில் தொடா்ச்சியான போக்கு இல்லை. கச்சா எண்ணெய் விலை தொடா்சியாக 80 டாலருக்கு குறைவாக இருக்கும்போது, தினசரி அடிப்படையிலான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும்’ என்றனா்.

அக்டோபா் மற்றும் செப்டம்பா் மாதங்களில் முறையே பேரலுக்கு 90.08 மற்றும் 93.54 டாலா் என்ற விலைக்கு கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்த நிலையில், நவம்பரில் 83.42 டாலருக்கு கொள்முதல் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com