மக்களவைத் தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம்: மல்லிகார்ஜுன கார்கே

நான்கு மாநில பேரவைத் தேர்தல் தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு வரும் மக்களவைத் தேர்தலுக்கு நம்மை முழுமையாகத் தயார்படுத்துவோம்
மக்களவைத் தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம்: மல்லிகார்ஜுன கார்கே


புதுதில்லி: நான்கு மாநில பேரவைத் தேர்தல் தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு வரும் மக்களவைத் தேர்தலுக்கு நம்மை முழுமையாகத் தயார்படுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக பெரிதும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கா் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலையில் இருந்து வருகின்றன 
மும்முனைப் போட்டி நிலவிய தென் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்)கட்சியை அகற்றி அரியணையில் ஏறுகிறது காங்கிரஸ். 

இந்த நிலையில், நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தற்காலிக பின்னடவை எதிர்கொண்டு வரும் மக்களவைத் தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம் என  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நான்கு மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் கார்கே பதிவிட்டிருப்பதாவது:

தெலங்கானாவில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று மாநிலங்களிலும் எங்களின் செயல்திறன் ஏமாற்றமளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் உறுதியுடன், இந்த மூன்று மாநிலங்களிலும் நம்மை மீண்டும் கட்டியெழுப்பவும், புத்துயிர் பெறவும் எங்களின் வலுவான உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி உற்சாகமான பிரசாரத்தில் ஈடுபட்டது.எங்கள் லட்சக்கணக்கான தொண்டர்களின் முயற்சிகளுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்காலிக பின்னடைவுகளை எதிர்கொண்டு,இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கு நம்மை முழுமையாகத் தயார்படுத்துவோம் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com